தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் வண்ணாத்திப்பட்டி பூதிநத்தம் கிராமத்தில் எழுந்தருளி உள்ள அருள்தரும் ஸ்ரீ சக்தி விநாயகர் மற்றும் ஸ்ரீ உச்சமரத்து மாரியம்மன் கோவிலின் ஜீர்ணோதாரண அஷ்டபந்தன கும்பாபிஷேகம் கடந்த 24 நாட்களுக்கு முன்பு சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து 24 நாள் மண்டல பூஜை மிக விமர்சையாக நடைபெற்று நிறைவு பெற்றது.
நிகழ்வை முன்னிட்டு கருமாரி அம்மன், காளி அம்மன், எங்கம்மன் கோவில் பகுதிகளில் இருந்து பெண்கள் பால்குடம் மற்றும் தீர்த்தக் குடம் தலையில் சுமந்து வரவேற்பு ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பம்பை மேளம் முழங்க நடனத்துடன் ஊர்வலம் சென்று, வானவேடிக்கையுடன் கோவிலில் பிரவேசித்தனர்.
கோவிலில் சிறப்பு யாகசாலை பூஜை, அக்னி கலச பூஜை, பின்னர் அம்மனுக்கு தீர்த்தம், அபிஷேகம், தீபாராதனை ஆகியவை முறையாக நடைபெற்றன. பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்குமாக கோவில் நிர்வாகம் மற்றும் ஊரார் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)