தருமபுரி – நவம்பர் 27:
தருமபுரி மேற்கு நகர திமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம், அக்கட்சியின் மேற்கு நகர பொறுப்பாளர் M.P. கௌதம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தருமபுரி கிழக்கு நகர பொறுப்பாளர் நாட்டான் மாது முன்னிலை வகித்தார்.
தருமபுரி திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி கலந்து கொண்டு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை சிறப்பாகக் கொண்டாடுவதற்கான ஆலோசனைகளை நிர்வாகிகளுக்கு வழங்கினார். மேலும், கூட்டத்தின் நோக்கம் மற்றும் வரவிருக்கும் நிகழ்வுகளைப் பற்றி சிறப்புரை ஆற்றினார்.
இந்த நிகழ்வில் அக்கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் ரேணுகாதேவி, மேற்கு நகர பொறுப்புக் குழு உறுப்பினர்கள் அழகுவேல், சம்மந்தம் MC, D.G. வடிவேல், சௌந்தர்ராஜன் MC, பாஸ்கர், வெங்கடாஜலபதி, சாந்தரூபிணி ஆகியோர் கலந்து கொண்டனர். அத்துடன் நகரப் பகுதிகளின் வார்டு கவுன்சிலர்கள், மாவட்ட மற்றும் நகர சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், வார்டு செயலாளர்கள், BLA2, BDA, BLC நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியின் முடிவில் அக்கட்சியின் மேற்கு நகர பொறுப்புக் குழு உறுப்பினர் ஜெகன் MC நன்றி கூறினார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)