புதிய தொழிலை தொடங்க முனையும் மகளிர் மற்றும் திருநங்கைகளுக்கு தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி மற்றும் தொழில் திறன் பயிற்சி வழங்கப்படும். கூடுதல் பயனாக, ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் தொழில் தொடங்க பிணையமில்லா கடன் வங்கிகள் வழியாக வழங்கப்படும். இதனுடன் 25% மானியம் (அதிகபட்சம் ரூ.2,00,000) வழங்கப்படும்.
- சுற்றுச்சூழலுக்கு உகந்த மக்கும் தன்மையுள்ள நாப்கின்கள் மற்றும் கேரிபேக்குகள் தயாரித்தல்
- திடக் கழிவுகளிலிருந்து பயனுள்ள பொருட்கள் தயாரித்தல்
- தையல், பானை உருவாக்குதல், சிற்பம் வடித்தல்
- இன்டீரியர் டிசைன், ஃபேஷன் ஸ்டூடியோ, ஃபிட்னஸ் சண்டர்கள்
அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளும், தாய்கோ வங்கி, கூட்டுறவு வங்கி மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களும் இத்திட்டத்தின் கீழ் கடன் வழங்க தகுதி பெற்றவை.
- 18 முதல் 55 வயது வரை
- தமிழ்நாட்டில் நிரந்தர வசிப்பிடம்
- அடிப்படைக் கல்வித் தகுதி அல்லது குடும்ப வருமான வரம்பு தேவையில்லை
தருமபுரி மாவட்ட மகளிரும் திருநங்கைகளும் இத்திட்டத்தின் பயனைப் பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். கூடுதல் தகவல்களுக்கு மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை 04342-230892 / 8925533941 / 8925533942 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)