பென்னாகரம் 110/33/11 கி.வோ. துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் வரும் 27.11.2022 (வியாழக்கிழமை) அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை பல பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.
மின் தடை ஏற்படும் பகுதிகள்:
பென்னாகரம், ஓகேனக்கல், ஏரியூர், பெரும்பாலை, சின்னம்பள்ளி, பாப்பாரப்பட்டி, கொல்லப்பட்டி, தோமனஅள்ளி, திகிலோடு, பி.அக்ரஹாரம், அதகப்பாடி, தாசம்பட்டி, சத்தியநாதபுரம், ஜக்கம்பட்டி, பிக்கிலி, காட்டம்பட்டி, பனைக்குளம், ஆலமரத்துபட்டி மற்றும் அருகிலுள்ள அனைத்து பகுதிகளும் மின் தடையால் பாதிக்கப்படும்.
பராமரிப்பு பணிகள் காரணமாக ஏற்படும் இந்த மின் தடை குறித்து பொதுமக்கள் முன்கூட்டியே தங்களின் தேவைகளை திட்டமிட்டு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

