- 057-பாலக்கோடு,
- 058-பென்னாகரம்,
- 059-தருமபுரி,
- 060-பாப்பிரெட்டிப்பட்டி,
- 061-அரூர் (தனி)
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு படிவங்களை வழங்கி, வாக்காளர்களிடமிருந்து நிரப்பப்பட்ட படிவங்களை மீண்டும் பெற்றுக் கொண்டு தரவு பதிவு பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது தருமபுரி மாவட்டத்தில் 96% படிவங்கள் வழங்கப்பட்டு, அதில் 50% படிவங்கள் மீண்டும் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.
தகுதியுடையவர்கள் பட்டியலில் சேர வேண்டும்; தகுதியற்றவர்கள் இடம்பெறக்கூடாது என்பதை உறுதி செய்ய அனைத்து நிலை அலுவலர்களும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். எனவே, வாக்காளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை சரியாக பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்குமாறும், அனைத்து வாக்காளர்களும் முழு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
- மாவட்ட கட்டுப்பாட்டு அறை – 1950
- WhatsApp தேர்தல் உதவி – 9444123456
- தருமபுரி – 04342-260927
- பாலக்கோடு – 04348-222045
- பென்னாகரம் – 04342-255636
- பாப்பிரெட்டிப்பட்டி – 04346-246544
- அரூர் – 04346-296565
முன்னதாக நடைபெற்ற கையெழுத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி, நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, நகராட்சி ஆணையர் சேகர், தருமபுரி வட்டாட்சியர் சௌகத் அலி உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)