தருமபுரி, நவ 16-
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் இடம்பெறும் குளறுபடிகள், தவறான நீக்கங்கள் மற்றும் சரிபார்ப்பில் குறைபாடுகள் ஆகியவற்றை கண்டித்து, தருமபுரி ஒருங்கிணைந்த மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் இன்று பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டம் அக்கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் தாபா சிவா தலைமையில் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட செயலாளர் விஜயகாந்த் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்,
“பறிக்காதே… பறிக்காதே… வாக்குரிமையை பறிக்காதே!”,“சரிபடுத்து… சரிபடுத்து… SIR குளறுபடிகளை சரிபடுத்து!”
என்ற கோஷங்களை எழுப்பி கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாவட்ட இணை செயலாளர் வீரமணி, மாவட்ட இளைஞரணி விமல் ராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இளங்கோ, மாவட்ட பொருளாளர் முருகன், மாவட்ட இளைஞரணி இணை அமைப்பாளர் ரமேஷ், துணை அமைப்பாளர் கோபி, தருமபுரி தெற்கு ஒன்றியச் செயலாளர் செந்தில்நாதன் உள்பட மாவட்டம், நகரம், மகளிர் அணிகள் மற்றும் கழக சார்பு அணிகளின் ஒன்றிய, கிளை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)