தருமபுரி, நவ. 16 -
பொள்ளாச்சியில் ஸ்ரீ சாய் அகாடமி சார்பில் நடைபெற்ற இரண்டாவது மாநில குறுக்குவில் மற்றும் காற்று துப்பாக்கி (Cross Bow & Air Pistol) சுடுதல் போட்டியில் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று சிறப்பான விளையாட்டு திறமையை வெளிப்படுத்தினர்.
ஷாவுலின் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் போட்டியில் கலந்து கொண்ட 16 மாணவர்கள் பதக்கங்களை வென்று சிறப்பிடம் பிடித்துள்ளனர். மாணவர்களின் திறமையும் பாராட்டத்தக்கதாக இருந்தது என்று விளையாட்டு வட்டாரத்தில் கூறப்படுகிறது. வெற்றி பெற்ற மாணவர்களை, தருமபுரி ஷாவுலின் ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனர் மற்றும் கிராண்ட் மாஸ்டர் திரு. சீனிவாசன், பயிற்சியாளர்கள் திரு. வெங்கடேசன், திரு. சத்திய உதயமூர்த்தி, மேலும் மாணவர்களின் பெற்றோர்களும் பாராட்டி வாழ்த்தினர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662