அரசின் முக்கியத் திட்டமான “தொல்குடித் தொடுவானம்” திட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெறும் இந்த அரிய முகாம், பழங்குடியினர் இளைஞர்களுக்கு தொழில்முறை திறன்களை கற்றுக்கொள்வதற்கும், வேலைவாய்ப்புகளை உறுதிசெய்யும் வகையிலும் சிறந்த வாய்ப்பாகும் என்று பழங்குடியினர் நலத்துறை தெரிவித்துள்ளது.
இந்த முகாம் 2025 நவம்பர் 8 (சனிக்கிழமை) அன்று சேலம் மாவட்டம், மல்லூரில் உள்ள தி கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை நடைபெறும். முகாமில் ஜெர்மன் மொழி பயிற்சி, கனரக மற்றும் இலகுரக வாகன ஓட்டுநர் பயிற்சி, துணை சுகாதாரப் படிப்புகள் (Allied Health Courses), மற்றும் டிராக்டர் உற்பத்தி மெக்கானிக் போன்ற சர்வதேசத் தரத்திலான மதிப்புமிக்க பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
இம்முகாமில் பங்கேற்க 18 முதல் 33 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இருபாலரும் தகுதி பெற்றவர்கள் ஆவர். பங்கேற்க விரும்பும் இளைஞர்கள், தங்கள் அதிகபட்ச கல்வித் தகுதி சான்றிதழ், ஆதார் அட்டை, சாதி சான்றிதழ், வங்கி கணக்குப் புத்தகம் மற்றும் 4 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் நேரில் வர வேண்டும்.

.jpg)