தருமபுரி மாவட்டம் மற்றும் தருமபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட வட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளின் குறைகளை தீர்ப்பதற்காக நடத்தப்படும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 07.11.2025 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 11.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்களின் அறிவுறுத்தலின்படி, ஒவ்வொரு மாதமும் முதல் வார வெள்ளிக்கிழமையன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.
இந்த மாத கூட்டம், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இதில், தருமபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட அனைத்து வட்டங்களிலும் உள்ள விவசாயிகளின் குறைகள் பெறப்பட்டு உரிய தீர்வுகள் காணப்படும்.
அத்துடன், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள், விவசாயிகள் மற்றும் விவசாயி சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை பகிர்ந்து கொள்ளுமாறும், கூட்டத்தில் பங்கேற்று பயன்பெறுமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)