தருமபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலகத்திற்கு சொந்தமான Bolero LX (வாகன எண்: TN09 BG 2345) வாகனம், பயன்பாடு நீங்கிய காரணத்தால் கழிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கழிவு செய்யப்பட்ட இவ்வாகனத்தின் மதிப்பு, ரூ.75,000/- என தொழில்நுட்ப வல்லுநர் குழுவினரால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, மேற்படி வாகனம் வரும் 07.11.2025 (வெள்ளிக்கிழமை) அன்று மாலை 3.00 மணிக்கு, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மறு ஏலம் விடப்பட உள்ளது. மேற்படி மறு ஏலத்தில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள், நேரில் வருகை தந்து விலைப்புள்ளியை (Bid Amount) கோரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தகவல் தெரிவித்தார் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு. வெ. லோகநாதன்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)