2025–26 கல்வி ஆண்டிற்கான கலைத்திருவிழா போட்டிகள், இவ்வாண்டு “பசுமையும் பாரம்பரியமும்” என்ற மையக்கருத்தின் அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. இத்திட்டம், தமிழ்நாட்டின் தொன்மை, பாரம்பரியம், பண்பாடு மற்றும் நாகரிகத்தின் சிறப்பை வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மாநில ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குநர், பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் வழிகாட்டுதலின்படி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களின் 1381 அரசு பள்ளிகள் மற்றும் 17 அரசு உதவி பெறும் பள்ளிகளில் கலைத்திருவிழா போட்டிகள் 2025 ஆகஸ்ட் 4 முதல் ஆகஸ்ட் 18 வரை பள்ளி அளவில் நடத்தப்பட்டன.
இப்போட்டிகளில் கவின்கலை, நுண்கலை, வாய்ப்பாட்டு இசை, இசைக்கருவிகள் வாசித்தல், நடனம், நாடகம் உள்ளிட்ட 100 பிரிவுகளில் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். பள்ளி அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களின் விவரங்கள் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன.
வட்டார மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகள்
பள்ளி அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்காக வட்டார அளவில் போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் வெற்றி பெற்ற மாணவர்கள், மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்றனர்.
பின்னர், மாவட்டக் கல்வி அலுவலர்கள், உதவித் திட்ட அலுவலர், தலைமை ஆசிரியர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் திருமதி சுதா நன்றியுரை வழங்கினார்.
- 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 29.10.2025,
- 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 03.11.2025,
- 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 04.11.2025,
- அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான போட்டிகள் 05.11.2025 அன்று அதே பள்ளியில் நடைபெற்றன.
மாநில அளவிலான போட்டிகள் நவம்பர் 24 முதல் மாவட்ட அளவில் தங்கள் கலைப் பிரிவுகளில் முதலிடம் பெற்ற தனி நபர் மற்றும் குழு மாணவர்கள், வரும் நவம்பர் 24, 2025 முதல் தொடங்கும் மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்த உள்ளனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)