இக்கூட்டத்தில் மொத்தம் 120 மனுக்கள் பெறப்பட்டன. இதில் கல்வி உதவித்தொகை, பராமரிப்பு நிதி, திருமண நிதி, மானிய வங்கி கடனுதவி, 3 சக்கர நாற்காலி, பேட்டரியால் இயங்கும் மோட்டார் வாகனம், ஊன்றுகோல், கண்கண்ணாடி மற்றும் காதொலி கருவி உள்ளிட்ட தேவைகளுக்கான மனுக்கள் அடங்கும். மாவட்ட ஆட்சித்தலைவர், பெறப்பட்ட அனைத்து மனுக்களும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தகுதியானோருக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
-
3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3,43,200/- மதிப்பில் மின்கலன் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலிகள்,
-
5 பேருக்கு ரூ.27,500/- மதிப்பில் காதொலி கருவிகள்,
-
4 பேருக்கு ரூ.63,000/- மதிப்பில் சக்கர நாற்காலிகள்,என பல்வேறு உதவிகள் உடனடியாக வழங்கப்பட்டன.
மேலும், தையல் இயந்திரம் வேண்டி மனு அளித்த ஒரு மாற்றுத்திறனாளிக்கு உடனடியாக தையல் இயந்திரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மூலம் வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவர், “மாற்றுத்திறனாளிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களுக்கு முன்னுரிமை அளித்து விரைந்து தீர்வு வழங்க அதிகாரிகள் கடமைப்பட்டு செயல்பட வேண்டும்” என வலியுறுத்தினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி கவிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி கவிதா, கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்ரீதரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு. சு. சரவணன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)