பாலக்கோடு, நவம்பர் 4:
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில், பேரூராட்சி சிறப்பு நிதியின் மூலம் ரூ.2.53 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டப் பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பாலக்கோடு தக்காளி மார்க்கெட் வளாகத்தில் நடைபெறும் இந்த வளர்ச்சி திட்டப் பணிகளில் —
-
ரூ.1.50 கோடியில் புதிய அறிவுசார் மையம் கட்டிடப் பணி,
-
ரூ.48 இலட்சத்தில் ஆடு அடிக்கும் தொட்டி அமைக்கும் பணி,
-
ரூ.50 இலட்சத்தில் தக்காளி மண்டி வளாகத்தில் மேற்கூரை அமைக்கும் பணி ஆகியவை இடம்பெற்றுள்ளன.
மொத்தம் ரூ.2.53 கோடி மதிப்பில் நடைபெறும் இந்தப் பணிகள் குறித்து கலெக்டர் ரெ. சதீஸ் அவர்கள் கட்டிடப் பணிகளின் முன்னேற்றத்தை நேரில் ஆய்வு செய்து, பணிகளை தரமான முறையில் விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வர அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
இத்தினாய்வின்போது பேரூராட்சி தலைவர் பி.கே. முரளி, செயல் அலுவலர் இந்துமதி, தாசில்தார் அசோக்குமார் உள்ளிட்ட பல துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)