Type Here to Get Search Results !

“தருமபுரி மாவட்டத்தின் ஐந்து தொகுதிகளிலும் திமுக டெபாசிட் இழக்கச் செய்வோம்,” பாலக்கோட்டில் அன்புமணி ராமதாஸ் பேச்சு.


பாலக்கோடு, நவம்பர் 4:

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையம் அருகே பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் “தமிழக மக்கள் உரிமை மீட்பு பொதுக்கூட்டம்” வெகுவிமரிசையாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு உற்சாகமான உரையாற்றினார். கூட்டம் தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் (MLA) தலைமையில் நடைபெற்றது.


தொகுதி பொறுப்பாளர் கே.இ. கிருஷ்ணன் வரவேற்று பேசினார். மாநில இளைஞரணி செயலாளர் முருகசாமி, மாநில துணைத்தலைவர் பாடி செல்வம், மாநிலப் பொறுப்பாளர்கள் வேளவள்ளி சேகர், அன்பழகன், மாநில மகளிரணி பொறுப்பாளர் சரவணக்குமாரி, பெரியம்மா நாகு, பானு, பாலகிருஷ்ணன், வாசு நாயுடு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

ஒன்றிய செயலாளர்கள் துரை, சுகர்மில் துரை, சரவணன், முருகன், சிலம்பரசன், குமார், சஞ்சீவன், கண்ணன், சின்னசாமி, பழனி, ஒன்றிய தலைவர்கள் ஏழு குண்டன், மாதையன், ராமசந்திரன், மகாதேவன், கோவிந்தசாமி, நகர தலைவர் ராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் ராஜவேல் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். இறுதியில் நகர செயலாளர் ராஜசேகர் நன்றி தெரிவித்தார்.


அன்புமணி ராமதாஸ் உரை முக்கிய அம்சங்கள்:

  • “இது பொதுக்கூட்டமா மாநாடா என தெரியவில்லை; இதுதான் ரத்த பாசம்,” என தொடங்கி, “கோடிக்கணக்கான தம்பிகளும் தங்கைகளும் பாசத்துடன் இணைந்துள்ளனர்” என்றார்.

  • தமிழகம் முழுவதும் 100 நாள் நடைபயணம் மேற்கொண்டுள்ளேன், இன்று 107ஆம் நாள். மக்களிடமிருந்து ஒரே ஓசை – “இந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்புங்கள்”.

  • “இன்னும் ஆறு மாதங்களில் இந்த கொடுங்கோல், ஊழல் ஆட்சி தூக்கி எறியப்படும்,” என்றார்.

  • “தர்மபுரியில் நான் செல்லாத கிராமமே இல்லை; உங்கள் பிரச்சனைகள் எனக்குத் தெரியும். ஆட்சியை மாற்றி விடுங்கள்.”

  • “என்னேகொல்புதூர், தொல்லகாது, தும்பலஅள்ளி நீர் திட்டங்கள் நிறைவேறவில்லை; அதிகாரம் இருந்தால் இதை நிறைவேற்றுவேன்,” என்றார்.

  • “காவேரி உபரிநீரை ஏரிகளுக்கு மாற்றும் திட்டம் அவசியம். 60 ஆண்டுகள் திமுக ஆட்சி எந்த முன்னேற்றமும் செய்யவில்லை. தர்மபுரியில் தண்ணீருக்கே பிச்சை எடுக்கும் நிலை,” எனக் குற்றம்சாட்டினார்.

  • “பாலக்கோடு சர்க்கரை ஆலை, விவசாயிகளுக்கான பதப்படுத்தும் கிடங்கு, குளிர்பதன வசதி எதுவும் இல்லை,” என்றார்.

  • “கோவை விமான நிலையம் அருகே பெண்கள் மீதான வன்முறை, கும்பிடிபூண்டியில் சிறுமி மீதான கொடுமை – இதற்கெல்லாம் காரணம் மதுவும், அதற்குக் காரணம் திமுக ஆட்சியும் தான்,” என்றார்.

  • “வன்னியர்களுக்கு 15% இடஒதுக்கீடு வழங்காமல் திமுக அரசு உச்சநீதிமன்றத் தீர்ப்பை புறக்கணித்துள்ளது; இதுவே திமுகவின் துரோகம்,” என வன்மையாகக் கூறினார்.

  • “சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி மக்களின் உண்மை நிலையை அறிய வேண்டும்; கல்வி, வேலைவாய்ப்பு, பெண்கள் நலம் ஆகிய துறைகளில் நடவடிக்கை எடுக்க முடியும்,” என்றார்.

  • “இலவசம் வேண்டாம் – கல்வி கொடு, வேலை கொடு, தண்ணீர் கொடு. இதுவே மக்களின் கோரிக்கை,” எனக் கூறி மக்களை எழுச்சியுறச் செய்தார்.

  • “தர்மபுரி மாவட்டத்தின் ஐந்து தொகுதிகளிலும் திமுக டெபாசிட் இழக்கச் செய்வோம்,” என உறுதியளித்தார்.


– செய்தி: தகடூர்குரல் | பாலக்கோடு

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies