தருமபுரி மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில், தூய்மை இந்தியா இயக்கம் (SBM 2.0) திட்டத்தின் கீழ் ரூ.4.59 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தின் கீழ்,
-
ரூ.52.98 இலட்சம் மதிப்பீட்டில் சமுதாயக் கழிப்பறைகள் மற்றும் பொதுக் கழிப்பறைகள் கட்டும் பணி,
-
ரூ.306.00 இலட்சம் மதிப்பீட்டில் நகராட்சி உரக்கிடங்குகளில் Bio-Mining முறையில் குப்பைகள் அகற்றும் பணி,
-
ரூ.85.00 இலட்சம் மதிப்பீட்டில் பொருட்கள் மீட்பு கூடம் (MRF) அமைக்கும் பணி,
-
ரூ.16.00 இலட்சம் மதிப்பீட்டில் STP-யில் (Decanting Facility) கட்டுமான பணி ஆகியவை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதன் மூலம் மாவட்டம் முழுவதும் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பராமரிப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளது என்று ஆட்சித்தலைவர் கூறியுள்ளார்.
– செய்தி: தகடூர்குரல் | தருமபுரி

.jpg)