பாலக்கோடு மேற்கு ஒன்றிய திமுக சார்பில், வாக்குச்சாவடி BLA-2, BLC, BDA மற்றும் பொதுஉறுப்பினர்களுக்கான ஆலோசனை கூட்டம் மாரண்டஅள்ளி சபரி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் தருமபுரி மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் முனைவர் பி. பழனியப்பன் அவர்களின் ஆலோசனைப்படி, பாலக்கோடு மேற்கு ஒன்றியச் செயலாளர் P.K. அன்பழகன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் தொகுதி பார்வையாளர் D.M. அரியப்பன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் T. சந்திரசேகர், ஒன்றிய அவைத்தலைவர் முருகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில்,
-
மாண்புமிகு கழகத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தலைமையில் மாமல்லபுரத்தில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டத்தில் வழங்கப்பட்ட ஆலோசனைகள்,
-
Special Intensive Revision (SIR) திருத்தப் பணிகள் 04.11.2025 முதல் நடைமுறைப்படுத்தப்படுவது,
-
மேலும் மாண்புமிகு இளைஞரணி செயலாளர் மற்றும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களின் பிறந்தநாள் விழாவை “எளியோரின் எழுச்சி நாள்” எனக் கொண்டாடுவது குறித்து விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் ஒன்றிய நிர்வாகிகள், வாக்குச்சாவடி BLA-2 முகவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
– செய்தி: தகடூர்குரல் | பாலக்கோடு

.jpg)