இந்த அன்னாபிஷேகம், உயிர்கள் அனைத்துக்கும் உணவும் நீரும் குறைவின்றி கிடைக்க, நாட்டிலும் வீட்டிலும் உணவுப் பஞ்சம் இல்லாமல் இருக்க இறைவனுக்கு நன்றி செலுத்தும் வகையில் நடைபெறுகிறது. நெல் விதை முதல் அன்னம் வரை ஐம்பூதங்களின் (நீர், நிலம், காற்று, தீ, ஆகாயம்) பங்களிப்பால் உருவாகும் உணவு, பஞ்சபூதங்களின் அருளை பிரதிபலிப்பதாக கருதப்படுகிறது. எனவே அன்னத்தை சிவலிங்கத் திருமேனியில் அர்ப்பணிப்பது மிகுந்த தத்துவமிக்க வழிபாடாக கருதப்படுகிறது.
அபிஷேகத்தின் போது, லிங்கத்தின் கீழ்பகுதியில் பிரம்ம பாகம், நடுப்பகுதியில் விஷ்ணு பாகம், மேற்பகுதியில் ருத்ர பாகம் என மூன்று பகுதிகளாக அன்னம் வைக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனுடன் யஜுர்வேத பாராயணம், ருத்ரம், சமகம் போன்ற மந்திர உச்சாரணங்களும் நடைபெற்றன. அபிஷேகத்திற்குப் பின், சிவலிங்கத்தில் வைக்கப்பட்ட அன்னம் புனிதமானது என்பதால் யாரும் அதை உண்ணாமல், கோயில் குளத்திலோ அல்லது ஆற்றிலோ கரைத்து, அதனை நீர் வாழ் உயிரினங்களுக்காக அர்ப்பணிக்கும் பாரம்பரியமும் கடைப்பிடிக்கப்பட்டது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனின் அருளைப் பெற்றனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)