ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றாக விளங்கும் பத்திரிகையாளர்கள், சமூகம் மற்றும் செய்தித்துறைக்கு ஆற்றிவரும் சிறப்பான பங்களிப்புக்காக தேசிய பத்திரிகையாளர்கள் தினத்தை முன்னிட்டு தருமபுரியில் தன்னார்வலர் அமைப்பினரால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
தருமபுரி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பெட்ரோல் நிலைய வளாகத்தில், தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் அருண் பாண்டியன், பிரசன்னா, விஜயகுமார், ஆச்சி சிவா, திருநாவுக்கரசு, மற்றும் சமூக விழிப்புணர்வாளர் வழக்கறிஞர் சுபாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில், தருமபுரி பத்திரிகையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து, கேக் வெட்டி வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.
பத்திரிகையாளர்கள் சமூகத்தின் பிரதிபலிப்பு கண்ணாடி போன்றவர்கள் எனக் கூறிய தன்னார்வலர்கள்,
“நேர்மையுடனும் துணிவுடனும் மக்களுக்குப் பயனுள்ள தகவல்களை வழங்கும் ஊடகவியலாளர்கள் நம் சமூகத்தின் விழிப்புணர்வு சக்தி,”என தெரிவித்தனர்.
தேசிய பத்திரிகையாளர்கள் தினத்தை முன்னிட்டு, ஊடகத் துறையின் முக்கியத்துவத்தையும், சமூகப் பொறுப்பையும் நினைவூட்டும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வு, ஊடகவியலாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)