அரூர் வட்டத்தில் உள்ள ஆண்டியூர் கிராமத்தில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த குடும்பங்கள் பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இன்றிக் கடுமையான அவலத்தில் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இக்கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட அருந்ததியர் குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். சாலை, குடிநீர், கழிப்பிட வசதி போன்ற அடிப்படை குடியிருப்பு வசதிகளும் போதுமான அளவில் இல்லாததோடு, இறுதிச் சடங்குகளுக்குத் தேவையான மயான வசதியும் இல்லாததால, மக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர்.
மயானம் இல்லாததால் இறந்தவர்கள் உடலை தொலைதூரத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இது அவர்களின் சமூக, பொருளாதார நிலையை கருத்தில் கொண்டால் மிகவும் சிரமமானதாக இருப்பதாக கிராம மக்கள் கூறுகின்றனர். இதனைத் தொடர்ந்து, இக்கிராம அருந்ததியர் மக்கள், அடிப்படை வசதிகள் மற்றும் புதிய மயானம் அமைக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

.jpg)