தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள சோமனஅள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் மர்ம நபர்கள் புகுந்து கணினி மற்றும் பிரிண்டரை திருடிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோமனஅள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.
இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் வெங்கடேசன் (54). கடந்த நவம்பர் 1-ம் தேதி சனிக்கிழமை, பள்ளி முடிந்த பிறகு தலைமை ஆசிரியர் அலுவலகத்தை பூட்டிவிட்டு சென்றார். இந்நிலையில் இன்று (திங்கட்கிழமை) காலை பள்ளியை சுத்தம் செய்ய வந்த பணியாளர் சுமதி, தலைமை ஆசிரியர் அறையின் கதவிலிருந்த பூட்டு உடைந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை உடனடியாக தலைமை ஆசிரியருக்கு தெரிவித்தார்.
விரைந்து வந்த வெங்கடேசன், அறைக்குள் சென்று பார்த்தபோது, அலுவலகப் பயன்பாட்டிற்காக இருந்த ₹30,000 மதிப்புள்ள கணினி, ₹10,000 மதிப்புள்ள பிரிண்டர் மற்றும் மைக்செட் உள்ளிட்ட மொத்தம் ₹40,000 மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்தச் சம்பவம் குறித்து தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் பேரில் பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசுப் பள்ளியில் மர்ம நபர்கள் புகுந்து திருட்டு நடத்தியது, அப்பகுதி பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

.jpg)