தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள பாளையத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ அம்மன் போலீஸ் கோச்சிங் சென்டர் மற்றும் சட்டையம்பட்டி உயிர் காக்கும் உறவுகள் அறக்கட்டளை இணைந்து, வரும் நவம்பர் 26 அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம் நடத்தினர். இம்முகாம் தீர்த்தமலை அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது.
முகாமில் பயிற்சி மைய மாணவர்கள், தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள் என மொத்தம் 60-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு 21 லிட்டர் ரத்தம் தானமாக வழங்கினர்.
நிகழ்ச்சியில் பயிற்சி மைய நிறுவனர் வழக்கறிஞர் அ.சி. தென்னரசு அழகேசன், ஆசிரியர் ஜெயபிரகாஷ், அகில இந்திய திருவள்ளுவர் பத்திரிகையாளர் சங்கத் தலைவர் டாக்டர் கவியரசு, திமுக பாப்பிரெட்டிப்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்தோஷ்குமார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சண்முகநதி, ஒன்றிய துணைச் செயலாளர் ராஜ்குமார், வேற்றுமை ஆசிரியர் கே.எம். தமிழரசன், சுரேஷ், கனிமொழி தென்னரசு, அமிர்தவள்ளி உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
முகாமில் ரத்தம் வழங்கிய மாணவர்களுக்கும் தன்னார்வலர்களுக்கும் தருமபுரி அரசு மருத்துவமனை ரத்த வங்கி அலுவலர் மருத்துவர் கன்னியா, மற்றும் தீர்த்தமலை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அழகரசன் ஆகியோர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையினை (Preamble) தீர்த்தமலை அரசு சுகாதார நிலையத்துக்கு பயிற்சி மைய நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது. முகாமை வெற்றிகரமாக ஒருங்கிணைத்தது ஸ்ரீ அம்மன் போலீஸ் கோச்சிங் சென்டர் மாணவர்கள் மற்றும் உயிர் காக்கும் உறவுகள் அறக்கட்டளை தன்னார்வலர்கள் ஆவர்.

.jpg)