பென்னாகரம், நவ. 21 -
058 – பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம் (SIR–2025) நவம்பர் 22 (சனி) மற்றும் 23 (ஞாயிறு) ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) மூலம் வழங்கப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை வாக்காளர்கள் கட்டாயம் பூர்த்தி செய்து, முகாமில் திரும்ப ஒப்படைக்க வேண்டும். படிவம் மீண்டும் அளிக்காதவர்களின் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாமல் போகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அனைத்து வாக்காளர்களும் முழுமையான ஒத்துழைப்புடன் குடும்ப உறுப்பினர்களின் தகவல்களையும் சரிபார்த்து, படிவங்களை முகாமில் சமர்ப்பித்து பயன்பெறுமாறு வாக்காளர் பதிவு அலுவலர் கேட்டுக்கொண்டுள்ளார்.
© தகடூர்குரல்.கோம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)