பாலக்கோடு, நவ. 17 -
2017 வரை நான்கு வகுப்பறைகளுடன் செயல்பட்டிருந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, 2018ல் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. பின்னர் தொடக்கப்பள்ளியும், உயர்நிலைப் பள்ளியும் தனித்தனியாக நடத்தப்பட்டாலும், இரண்டிலும் மிக குறைந்த வகுப்பறை வசதியுடன் பள்ளிகள் இயங்கி வருகின்றன.
பள்ளி தரம் உயர்த்தப்பட்ட காலம் முதல் கூடுதல் கட்டட வசதி கோரி மக்கள் பலமுறை கோரிக்கை வைத்துள்ளனர். பள்ளி அருகில் அரசுத் தொகுதி இல்லாததால், ஊர் பொதுமக்கள் தாமாக முன்வந்து 2022ஆம் ஆண்டு 1 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கி, பாலக்கோடு பி.டி.ஓ. பெயரில் பத்திரம் செய்து ஒப்படைத்தனர்.
இவ்வளவு முயற்சிகளுக்குப் பின்னரும், பள்ளிகளுக்கு புதிய கட்டடம் கட்ட அரசு அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு இதுவரை கிடைக்கவில்லை. கோவிலில் நடத்தப்படும் வகுப்புகளுக்கு கரும்பலகை வைப்பதற்கே கூட இடமின்மை காணப்படுகிறது. ஜோதிஹள்ளி பகுதிப் பொதுமக்கள், மாணவர்கள் பாதுகாப்பாகவும், அடிப்படை வசதிகளுடன் கல்வி கற்கவும் உடனடி கட்டடம் கட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

.jpg)