பாலக்கோடு, நவ. 19 -
தருமபுரி — மாரண்டஅள்ளி அடுத்த கவுனூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ், இவர் 2015ஆம் ஆண்டு வெள்ளையன் என்பவரிடமிருந்து 24 சென்ட் நிலத்தை முறையாக வாங்கி ஆவணப் பதிவு செய்துள்ளார். ஆனால் அதே நிலத்தை, கடந்த நவம்பர் 3ஆம் தேதி மாரண்டஅள்ளி சார்பதிவாளர் அலுவலகத்தில் முருகன், காவேரி ஆகியோர் தீபா என்ற பெண்ணுக்கு விற்பனை செய்து பதிவு செய்துள்ளனர் என்பது கோவிந்தராஜுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விளக்கம் கேட்க சார்பதிவாளர் மாரியப்பனிடம் சென்ற கோவிந்தராஜ், தனது உண்மையான பத்திரம், பட்டா, ஈசிஎஸ் உள்ளிட்ட ஆவணங்களை காட்டியும், தனது பெயரில் உள்ள சொத்து எப்படி வேறு ஒருவருக்கு பதிவு செய்யப்பட்டது என கேள்வி எழுப்பியுள்ளார். சார்பதிவாளர் உரிய பதில் அளிக்காததால் கோவிந்தராஜ் நேரடியாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகார் மாரண்டஅள்ளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)