பாலக்கோடு, நவ. 17 -
கார்த்திகை மாதத்தின் முதல் நாளை முன்னிட்டு, பாலக்கோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திரளான ஐயப்ப சுவாமி பக்தர்கள் மாலை அணிந்து 48 நாட்கள் விரதத்தை தொடங்கினர். ஒவ்வொரு வருடமும் தருமபுரி மாவட்டம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை பயணம் மேற்கொள்வது இயல்பாகும்.
இந்த ஆண்டும் கார்த்திகை முதல் நாளிலேயே பல்வேறு கோயில்களுக்கு பக்தர்கள் கூட்டம் திரண்டு, குருசாமிகள் வழிநடத்தலில் ஐயப்ப சுவாமிக்கு மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினர். பாலக்கோடு வேணுகோபால் சுவாமி கோயிலில் அதிகாலையிலேயே சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஐயப்ப சுவாமிக்கு அழகு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காணப்பட்டதுடன், 300க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு குருசாமிகள் மாலை அணிவித்து விரதத்தை தொடங்கிவைத்தனர்.
பக்தர்கள் அனைவரும் “சாமியே சரணம் அய்யப்பா” என்று முழங்கிச் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

.jpg)
.jpg)