தருமபுரி – நவம்பர் 21
தமிழ்நாடு அரசின் அறிவிப்பின்படி, கிராமப்புற பெண்கள் மற்றும் இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
2025–2026 ஆம் ஆண்டில் 42,000 கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுய வேலைவாய்ப்புக்கான பயிற்சி வழங்க மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சமுதாய திறன் பயிற்சி பள்ளிகள் துவக்கம்
உள்ளூர் அனுபவமிக்க நிபுணர்களை பயிற்றுநர்களாக கொண்டு, கிராம மக்களுக்கு நேரடி பயிற்சி அளிக்கும் சமுதாய திறன் பயிற்சி பள்ளிகள் மூலம் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இதன் கீழ் 30 தொழில் பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது:
-
கொத்தனார்
-
எலக்ட்ரீஷியன்
-
இருசக்கர வாகன பழுது பார்த்தல்
-
ஏ.சி மெக்கானிக்
-
ஆரி எம்பிராய்டரி
-
வாகன ஓட்டுநர் உரிமம்
-
சூரிய ஒளி பலகை நிறுவுதல்
-
அழகு நிலைய மேலாண்மைஆகியவற்றை உள்ளடக்கியது.
தருமபுரியில் 45 திறன் பயிற்சி பள்ளிகள் – முதற்கட்டமாக 15 துவக்கம்
தருமபுரி மாவட்டத்தில்:
-
ஆரி எம்பிராய்டரி
-
தையல் இயந்திரம் பழுது பார்ப்பு
-
விவசாய கருவிகள் பராமரிப்பு
-
ஆட்டோமொபைல்
-
அழகுக் கலை
-
கட்டுமானம்
-
எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ்
-
கைவினைப் பொருட்கள்
-
பிளம்பிங்
-
டெக்ஸ்டைல்
-
சிறுதானிய உணவகங்கள் தயாரித்தல்
ஆகிய பயிற்சிகள் 45 திறன் பயிற்சி பள்ளிகளில் வழங்கப்பட உள்ளது.
முதற்கட்டமாக 15 பள்ளிகள் துவக்கப்பட்டு பயிற்சி நடைபெற்று வருகிறது.
மீதமுள்ள பள்ளிகள்:
-
20.11.2025
-
01.12.2025
-
10.12.2025
என்ற தினங்களில் தொடர்ச்சியாக துவங்கப்படுகின்றன.
யார் கலந்து கொள்ளலாம்?
-
சுய உதவிக் குழு உறுப்பினர்கள்
-
அவர்களது குடும்பத்தை சேர்ந்த ஆண்/பெண் இளைஞர்கள்
-
வயது: 18–45
-
உள்ளூரிலேயே, இலவசமாக, பகுதி நேரம், குறுகிய கால பயிற்சி
தொடர்பு கொள்ள
விருப்பமுள்ளவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:
அல்லது சம்பந்தப்பட்ட வட்டார இயக்க மேலாளர்களை தொடர்பு கொள்ளலாம்.
© தகடூர்குரல்.கோம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)