பாலக்கோடு, நவ. 21 -
பாலக்கோடு அருகே ரெட்டியூர் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் சுமார் 13 அடி நீளமுடைய மலைப்பாம்பு புகுந்ததால் அப்பகுதி மக்கள் பெரும் பரபரப்புக்கு உள்ளானனர். உள்ளூர் விவசாயி சாம்ராஜ் (48) என்பவரின் நெல் அறுவடை செய்யப்பட்ட வயலில், வைக்கோல் மேட்டில் பெரிய மலைப்பாம்பு இறையை விழுங்கிய நிலையில் நகர முடியாமல் கிடந்தது. இதைக் கண்ட அவர் அதிர்ச்சி அடைந்து கிராம மக்களுடன் வனத்துறைக்கு தகவல் அளித்தார்.
உடனடியாக பாலக்கோடு வனசரக அலுவலர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து, பாம்பை சேதமில்லாமல் கவனமாக பிடித்து அருகிலுள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக கொண்டு சென்று விட்டனர். அவ்வப்போது இறை தேடி மலைப்பாம்புகள், காட்டு பன்றிகள் போன்ற காட்டு விலங்குகள் கிராமப்புற பகுதிகளில் நுழைவதால், மக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருவதாகவும் கூறப்படுகிறது.

.jpg)