பாலக்கோடு, நவ. 16 -
பாலக்கோடு அருகே கல்கூடப்பட்டியில் 60 ஆண்டுகளாக விவசாயம் செய்து, குடும்பத்துடன் குடியிருந்து வந்த விவசாயி மாதையன் மீது திடீர் நில தகராறு வெடித்து, வீடு இடிக்கும் முயற்சியால் பரபரப்பு ஏற்பட்டது. முத்துகவுண்டர் தெருவை சேர்ந்த மாதையன், பாப்பாரப்பட்டியை சேர்ந்த நில உரிமையாளரின் 4 ஏக்கர் நிலத்தை குத்தகை அடிப்படையில் நீண்ட காலமாக பயிரிட்டு வந்தார். அந்நிலத்தில் வீடு அமைத்து தென்னை மரங்கள் உள்ளிட்ட பல்வேறு பயிர்களையும் வளர்த்து வருகிறார்.
பின்னர் நில உரிமையாளர், நிலத்தை மாதையனுக்கே விற்பதாக கூறி ஒப்பந்தம் செய்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்காக குறிப்பிட்ட பகுதி கையகப்படுத்தப்பட்ட நிலையில், மீதமுள்ள நிலத்தை வாக்குறுதியை மீறி மற்றொருவருக்கு அதிக விலையில் விற்றது தகராறை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், இன்று காலையில் 10-க்கும் மேற்பட்ட நபர்கள், ராட்சத பொக்லைன் இயந்திரத்துடன் வந்து மாதையன் குடும்பம் வசிக்கும் வீட்டை இடிக்க முயன்றதாக தகவல். இதனால் கொந்தளித்த மாதையன் மற்றும் அவரது உறவினர்கள்,
பரபரப்பு அதிகரித்ததை அடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்த பாலக்கோடு டி.எஸ்.பி ராஜசுந்தர், இரு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். எந்த வகையான இடிப்பு நடவடிக்கையும் சுமூக தீர்வு வரும் வரை மேற்கொள்ளக்கூடாது என்று எச்சரித்தார். டி.எஸ்.பி தலையீட்டினால் உடனடி பதற்றம் அடங்கிய நிலையில், இரு தரப்பினரும் பின்னர் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)