பாலக்கோடு பட்டாளம்மன் கோவில் வளாகத்தில் சட்ட தூண்கள் அறக்கட்டளை சார்பில் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் பி.கே. சிவா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தை மாநில பொருளாளர், ஓய்வு பெற்ற நீதித்துறை அலுவலர் காவேரி, மற்றும் அறங்காவலர்கள் குமரவேல், முத்து ஆகியோர் முன்னிலை வகித்து துவக்கி வைத்தனர்.
இந்த நிகழ்வில் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவர் குணசேகரன் கலந்து கொண்டு,
அரசு அலுவலகங்கள் மற்றும் காவல் நிலையங்களில் பொதுமக்களின் குறைகள்,
புகார்கள் தொடர்பான அதிகாரிகளின் நடவடிக்கைகளை எவ்வாறு அறிந்து கொள்வது,
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பயன்பாடு,
- சட்ட விழிப்புணர்வுபோன்ற முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக விளக்கமளித்தார்.
தொடர்ந்து மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு கௌதம் தலைமையில், நாகராஜ், கணேஷ், முனிராஜ் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் புதியதாக 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அறக்கட்டளையில் இணைந்தனர். இக்கூட்டத்தில் மாநிலம், மாவட்டம், பேரூர் மற்றும் கிளை நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

.jpg)