கடத்தூர், நவம்பர் 15:
புட்டிரெட்டிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மாவட்ட மட்ட விளையாட்டு போட்டிகளில் சிறப்பான சாதனை புரிந்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற சரக அளவிலான கால்பந்து போட்டியில் முதலிடம், கபடி போட்டியில் இரண்டாம் இடம், மேலும் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் மூன்றாம் இடம் என மொத்தம் மூன்று பிரிவுகளிலும் மாணவர்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
இதையடுத்து, வெற்றி பெற்ற மாணவர்களையும் அவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் பழனிதுரை, கணபதி, கார்த்திக் ஆகியோரையும் பள்ளி தலைமை ஆசிரியர் மணி அவர்கள் சிறப்பாக பாராட்டி வாழ்த்தினார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நினைவு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாணவர்களின் சாதனையை ஊர் பொதுமக்கள், பெற்றோர்-ஆசிரியர் கழகம் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி & விளம்பர தொடர்புக்கு: 📞 9843 663 662

.jpg)