பாலக்கோடு , நவம்பர் 16:
பாலக்கோடு அருகே உள்ள கல்கூடப்பட்டி பொன்னன் தெருவில் விஷப்பாம்பு ஒன்று வீட்டு மாடியில் தோன்றியதால் அப்பகுதியில் ஒரு கட்ட அச்சம் நிலவியது. அங்கு வசிக்கும் மாதேஷின் மனைவி இன்று காலை வீட்டின் மாடிக்கு சென்றபோது, சுமார் 3 அடி நீளமுள்ள கொம்பேரிமூக்கன் பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக பாலக்கோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பாம்பை பிடிக்க முயன்றபோது, அது மாடியில் இருந்த பழைய பொருட்களுக்குள் புகுந்து கொண்டது. நீண்ட நேரம் முயற்சி மேற்கொண்ட தீயணைப்பு வீரர்கள் இறுதியில் பாம்பை உயிருடன் பாதுகாப்பாக பிடித்தனர். பிடிபட்ட பாம்பு அதிக விஷத்தன்மை கொண்ட கொம்பேரிமூக்கன் எனவும், அதை பாதுகாப்பாக சாக்குப் பையில் அடைத்து காப்புக் காட்டில் விடுவித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
குடியிருப்பு பகுதிகளில் விஷப்பாம்புகள் தோன்றுவது பொதுமக்களிடையே அதிக அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
© தகடூர்குரல்.காம் | செய்தி & விளம்பர தொடர்புக்கு: 📞 9843 663 662

.jpg)