தருமபுரி, நவம்பர் 15:
தருமபுரி மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) சார்பில் நடைபெற்று வரும் ஆசிரியர் தகுதித் தேர்வு – தாள் 1 (OMR Based TET Paper–I) நடைபெறும் நிலையைக் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நவம்பர் 2025 மாதத்திற்கான TET Paper–I தேர்வு இன்று காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை நடைபெற்று முடிந்தது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள 13 தேர்வு மையங்களில் மொத்தம் 3,511 தேர்வர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர்.
இதில்
-
தேர்விற்கு வருகை புரிந்தோர் – 3,092
-
வருகை தராதோர் – 419
என்று தேர்வு வாரியம் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டது.
தேர்வு நடைபெறும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்தும் பொருட்டு, கண்காணிப்பாளர்கள், தலைமை கண்காணிப்பாளர்கள், பறக்கும்படையினர், கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன. மாவட்ட ஆட்சித்தலைவர் தேர்வு மையங்களில் சுற்றிப்பார்த்து, தேர்வு நடைபெறும் முறைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், தேர்வர்கள் அடையாளச் சோதனை, கேள்வித்தாள் விநியோகம் உள்ளிட்ட அம்சங்களை ஆய்வு செய்தார்.
தருமபுரி மாவட்டத்தில் தாள் – 2 (OMR Based TET Paper–II) தேர்வு நாளை 16.11.2025 அன்று நடைபெற உள்ளது.
-
மொத்த தேர்வு மையங்கள் – 62
-
விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் – 16,989
அனைத்து தேர்வர்களும் தேர்வு நேரத்திற்கும் முன் தேர்வு மையம் சென்றுசேருமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
© தகடூர்குரல்.காம் | செய்தி & விளம்பர தொடர்புக்கு: 📞 9843 663 662

.jpg)