பேரணியை தருமபுரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பேரணியில் கலந்து கொண்டனர். அதற்கு முன் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியும் எடுக்கப்பட்டது. சர்தார் வல்லபாய் பட்டேலின் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கல்லூரி முதல்வர் டாக்டர் பிரேமகுமாரி தலைமை தாங்கினார்; துணை முதல்வர் டாக்டர் செந்தில் குமார் முன்னிலை வகித்தார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் நந்தினி வரவேற்புரை ஆற்றினார். மை பாரத் தருமபுரி துணை இயக்குனர் ட்ரவீன் சார்லஸ்டன் நிகழ்ச்சி விளக்கவுரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக தருமபுரி மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் சாந்தி கலந்து கொண்டு சர்தார் வல்லபாய் பட்டேலின் வாழ்க்கைச் சுருக்கத்தை விரிவாக பகிர்ந்தார்.
ஒரு வாரத்திற்கு முன்பே மாணவ–மாணவிகளுக்கு பேச்சு, ஓவியம், கட்டுரை, கலைநிகழ்ச்சி போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றியாளர்களுக்கு மை பாரத் தருமபுரி சார்பில் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பேரணியின் போது கிருஷ்ணகிரியை சேர்ந்த கிராமிய இசைக் தென்றல் கலைக்குழு மூலம் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
பேரணிக்கு முன்னதாக சர்தார் வல்லபாய் பட்டேலின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் காணொளி காட்சி LED வாகனம் மூலம் ஒளிபரப்பப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மை பாரத் தருமபுரி, தேசிய இளைஞர் தொண்டர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக, தாவரவியல் துறையின் உதவி பேராசிரியர் கிருஷ்ணவேணி நன்றி கூறினார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)