பென்னாகரம் பகுதியில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட பேக்கரிகள் இயங்கி வருகின்றன. பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற பொதுமக்களின் குற்றச்சாட்டினை தொடர்ந்து, இன்று தருமபுரி உணவு பாதுகாப்புத்துறை தலைமை அதிகாரி நந்தகோபால் தலைமையிலான குழுவினர் திடீர் சோதனை நடத்தினர்.
சோதனையின் போது, பல பேக்கரிகளில்
-
அழுகி துர்நாற்றம் வீசும் முட்டைகள்,
-
கெட்டுப்போன உணவுப்பொருட்கள்,
-
காலாவதியான பேக்கரி பொருட்கள்,
-
உணவு தயாரிக்கும் பகுதிகளில் சுகாதாரமற்ற சூழல், துர்நாற்றம், அழுக்கான மேஜைகள் உள்ளிட்ட பல குறைகள் கண்டறியப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, விதிமுறைகளை மீறிய பேக்கரி கடைகளுக்கு அபராதம் விதித்து, சீர்செய்ய எச்சரிக்கை வழங்கப்பட்டது. உணவு தயாரிப்பு பகுதியில் சுகாதார விதிகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
சோதனையின் போது காணப்பட்ட சுகாதாரமற்ற நிலையைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதன் காரணமாக பென்னாகரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
© தகடூர்குரல்.காம் | செய்தி & விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)