பாலக்கோடு – நவம்பர் 14:
பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, பாலக்கோடு பகுதியில் பாஜக சார்பில் வெற்றிக் கொண்டாட்டம் நடைபெற்றது. பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இந்த கொண்டாட்டத்துக்கு நகர பாஜக தலைவர் கணேசன் தலைமையேற்றார். பாஜகவினர் பட்டாசு வெடித்து, ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கி மகிழ்ச்சி வெளிப்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட மீனவர் அணி செயலாளர் மாதையன், மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் சின்னவன், மாவட்ட நிர்வாகிகள் சுரேஷ், பெரியசாமி, வேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டு வெற்றியை கொண்டாடினர். பீகார் சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் NDA கூட்டணி பெரும்பான்மையைப் பெற்றதாக வெளியான தகவலுக்கு பின்னர் நாட்டின் பல பகுதிகளைப் போலவே பாலக்கோட்டிலும் பாஜகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி & விளம்பர தொடர்புக்கு: 📞 9843 663 662

.jpg)