Type Here to Get Search Results !

தவெக வாட்ஸ்அப் குழு மூலம் ரத்த தானம் செய்து உயிர்களை காப்பாற்றும் பாப்பாரப்பட்டி இளைஞர்கள்! இன, மத பேதமின்றி மனிதநேயம் காட்டும் ரமேஷ் மற்றும் நண்பர்கள் சேவை பாராட்டு.


பாப்பாரப்பட்டி, நவம்பர் 19 —

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் என்ற இளைஞர் சமூக சேவையில் காட்டும் அர்ப்பணிப்பு அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்று வருகிறது. கட்டிட மேஸ்திரியாக பணிபுரியும் அவர், தவெக வாட்ஸ்அப் குழுவை அமைத்து பல்வேறு சமூக நலப்பணிகளை செய்து வருகிறார்.

குறிப்பாக, ரத்த தான சேவையில் ரமேஷ் மற்றும் அவரது நண்பர்கள் முன்னிலையில் செயல்படுவது அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அவசர காலத்தில் ரத்தம் தேவைப்படுவதாக தகவல் கிடைத்தவுடன், இளைஞர்கள் இனம், மதம், பாகுபாடு பார்க்காமல் உடனே சென்று ரத்த தானம் செய்து உயிர்களை காப்பாற்றி வருகின்றனர்.


கடந்த ஒரே வாரத்தில் மட்டும் 10க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு ரத்த தானம் செய்துள்ளனர். மேலும், ஆதரவற்ற முதியோருக்கும் இவர்களால் இயன்ற உதவிகள் செய்து வரப்படுகின்றன. தருமபுரி மாவட்டம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கர்ப்பிணிகள், தாய்மார்கள் மற்றும் அவசர நோயாளிகளுக்கு ரத்தம் தேவைப்படும் தருணங்களில் இவர்களே முதலில் சென்று உதவி செய்து வருகின்றனர். ரமேஷ் மற்றும் அவரது நண்பர்களின் இந்த மனிதநேய சேவை அப்பகுதி மக்களாலும் சமூக ஆர்வலர்களாலும் பெரிதும் பாராட்டப்படுகிறது.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies