தருமபுரி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் முத்துசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் ஆக்கப்பணிகள், வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தல் தயாரிப்புகள், மேலும் அமமுக பொதுச் செயலாளர் TTV தினகரன் தருமபுரி மாவட்டத்திற்கு வருகை தரும் நிலையில் அவருக்கு சிறப்பான வரவேற்பை வழங்குவது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
இக்கூட்டத்தில் அமமுக மாவட்ட செயலாளரும், அமைப்புச் செயலாளருமான டி.கே. ராஜேந்திரன் நிர்வாகிகளுக்கு வழிகாட்டும் ஆலோசனைகளை வழங்கினார். கூட்டத்தில் ஆட்சி மன்ற குழு தலைவர் ஆர்.ஆர்.முருகன், மாநில சுற்றுச்சூழல் அணியின் செயலாளர் ஆர்.பாலு, ஒன்றிய செயலாளர்கள் பாஸ்கர், குமார், கணேசன், டி.கே.ஆர். ரமேஷ், நகர செயலாளர் பார்த்திபன் உள்ளிட்ட மாநில, மாவட்ட, நகர, பேரூர், ஒன்றிய மற்றும் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)