நல்லம்பள்ளி, நவம்பர் 13:
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள பண்டஅள்ளி பகுதியில் தெருநாய்கள் கடித்து குதறியதில் ஒரு விவசாயியின் 10 ஆடுகள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பண்டஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஞானம் என்பவர் தனது வீட்டில் ஆடுகள் மற்றும் மாடுகளை வளர்த்து வருகிறார். வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டது. இதனால் ஞானம் மற்றும் குடும்பத்தினர் ஓடி சென்று பார்த்தபோது, 8-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சேர்ந்து ஆடுகளை கடித்து குதறிக் கொண்டிருந்தது.
ஞானம் நாய்களை துரத்தினாலும், அதற்குள் 10 ஆடுகள் இறந்து கிடந்தன. இறந்த ஆடுகளின் மதிப்பு ஒரு லட்ச ரூபாய்க்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
பண்டஅள்ளி உட்பட பல கிராமப்புறங்களில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும்,
-
ஆடு, மாடு, கோழி போன்ற செல்லப்பிராணிகளை அடிக்கடி தாக்குவதாகவும்,
-
சிறிய குழந்தைகளையும் துரத்துவதாகவும் மக்கள் வேதனைப் படுகின்றனர்.
உயிரிழந்த ஆடுகளின் உரிமையாளருக்கு உடனடியாக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும்,
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு: 📞 9843 663 662

.jpg)