Type Here to Get Search Results !

2025–26 சிறப்பு பருவ நெல் பயிர் காப்பீடு: நவம்பர் 15 கடைசி நாள் – தருமபுரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.


தருமபுரி, நவம்பர் 13:

2025–26 சிறப்பு பருவத்தில் நெல் உள்ளிட்ட பயிர்களுக்கு காப்பீடு செய்ய வரும் நவம்பர் 15, 2025 கடைசி நாளாகும் என்று தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஷ், இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார். பிரதம மந்திரி பயிர்காப்பீட்டு திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு தருமபுரி மாவட்டத்தில் பயிர்காப்பீட்டு பணிகளை மேற்கொள்ள பஜாஜ் அலையன்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

காப்பீடு செய்வது எப்படி?

  • கடன் பெறும் விவசாயிகள் → அவர்கள் கடன் பெற்ற வங்கி மூலமாகவே காப்பீடு செய்து கொள்ளலாம்.

  • கடன் பெறாத விவசாயிகள்

    • தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள்

    • பொதுச் சேவை மையங்கள் (இ-சேவை மையங்கள்)
      மூலமாக காப்பீடு பதிவு செய்யலாம்.


தேவையான ஆவணங்கள்

  • பதிவு விண்ணப்பம்

  • கிராம நிர்வாக அலுவலர் வழங்கிய நடப்பு பசலிக்கான அடங்கல் / இ-அடங்கல் / விதைப்பு சான்றிதழ்

  • வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்கம் நகல்

  • ஆதார் அட்டை நகல்


பிரீமியம் தொகை

  • நெல் பயிருக்கு – ரூ. 575

பிரீமியம் செலுத்திய பின் பொது சேவை மையம் அல்லது சார்ந்த வங்கி/சங்கத்தில் இருந்து ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்.


விவசாயிகள் திட்டம் பற்றிய கூடுதல் விபரங்களுக்கு –

📌 வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்
📌 வேளாண்மை அலுவலர் / உதவி வேளாண்மை அலுவலர்
📌 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்
📌 பஜாஜ் அலையன்ஸ் காப்பீட்டு நிறுவனம்
ஆகியவற்றை அணுகலாம்.

“விவசாயிகள் அனைவரும் கடைசி நாளான 15.11.2025 முன்னர் காப்பீடு செய்து பயன்பெற வேண்டும்” என மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஷ் அவர்கள் கேட்டுக்கொண்டார்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு: 📞 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies