தருமபுரி மாவட்டம் அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், ஜல் ஜீவன் மிஷன், சன்சத் ஆதர்ஷ் கிராம யோஜனா, சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டங்கள், கலைஞரின் கனவு இல்லம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம், அண்ணா மறுமலர்ச்சி திட்டம்–2, பள்ளிகள் மற்றும் குழந்தைநேய பள்ளிகளின் உட்கட்டமைப்பு மேம்பாடு, பிரதம மந்திரி அவாஸ் யோஜனா போன்ற பல்வேறு திட்டப் பணிகள் தொடர்பாக விரிவான மதிப்பாய்வு நடத்தப்பட்டது.
மாவட்ட ஆட்சித்தலைவர்,
“நிலுவையில் உள்ள அனைத்து வளர்ச்சி பணிகளும் குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள் நிறைவேற்றப்பட்டு பொதுமக்களால் பயன்படுத்தும் வகையில் விரைந்து முடிக்கப்பட வேண்டும்”என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் அரூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமதி ஐ. மார்கரெட், திருமதி சி. கலைச்செல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு: 📞 9843 663 662

.jpg)