Type Here to Get Search Results !

பஞ்சப்பள்ளி அரசு மருத்துவமனையில் 8வது இயற்கை மருத்துவ தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.


பாலக்கோடு | நவம்பர் 19:

பஞ்சப்பள்ளி அரசு மருத்துவமனையில் 8வது இயற்கை மருத்துவ தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுடன் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மருத்துவமனை வளாகத்திலிருந்து பஸ் நிலையம் வரை இயற்கை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் விழிப்புணர்வு ஊர்வலமாக சென்று பொதுமக்களுக்கு ஆரோக்கிய தகவல்களைப் பரப்பினர்.

விழாவில் இயற்கை மருத்துவ முறைகளான:

  • அக்குபிரஷர்,

  • அக்குபஞ்சர்,

  • களிமண் குளியல்,

  • யோகா,

  • கண் குளியல்,

  • வாழ்வியல் முறை மாற்றங்கள்,

  • உணவு பழக்கவழக்க வழிகாட்டல்கள்

ஆகியவைகளை இயற்கை மருத்துவர் பிரித்திவிராஜ் செய்முறை காட்சிகளுடன் விளக்கினார்.


நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்களுக்கு முளைகட்டிய தானியங்கள், ஆரோக்கிய சூப்புகள் வழங்கப்பட்டதுடன், வீட்டிலேயே செய்யக்கூடிய இயற்கை மருத்துவ சிகிச்சை முறைகள் கற்பிக்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் மரண்டஹள்ளி வட்டார மருத்துவ அலுவலர் மரு. சிவகுரு தலைமையேற்றார், பஞ்சப்பள்ளி காவல் நிலைய அதிகாரிகள் மாதையன், சரவணன் மேற்பார்வை செய்தனர், மரு. சோனியா, யோகா மற்றும் இயற்கை மருத்துவவர் பிரித்திவிராஜ், பல்நோக்கு பணியாளர் வெங்கடேஸ்வரி, பகுதி சுகாதார செவிலியர் லட்சுமி, கிராம சுகாதார செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies