Type Here to Get Search Results !

ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்ட கிறித்தவர்களுக்கு மானியம் – விண்ணப்பங்கள் வரவேற்பு.


தருமபுரி | நவம்பர் 19:

தமிழ்நாடு அரசின் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்ட கிறித்தவர்களுக்கு மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய 600 கிறித்தவர்கள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதன் கீழ்:

  • புனிதப் பயணம் மேற்கொண்டு வந்த 550 கிறித்துவ பயணிகளுக்கு – நபர் ஒன்றுக்கு ₹37,000,

  • 50 கன்னியாஸ்திரிகள் / அருட்சகோதரிகளுக்கு – நபர் ஒன்றுக்கு ₹60,000,

ECS முறையில் நேரடியாக மானியம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்க வேண்டியவர்கள்

01.01.2025க்கு பிறகு ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்ட அனைத்து கிறித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பப் படிவம் பெறும் இடங்கள்

  • மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம்

  • சிறுபான்மையினர் நல அலுவலகங்கள்

  • இணையதளம்: www.bcmbemw.tn.gov.in (கட்டணமின்றி பதிவிறக்கம் செய்யலாம்)

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை,
கலசமஹால் பாரம்பரிய கட்டிடம்,
முதல் தளம், சேப்பாக்கம்,
சென்னை – 600005

விண்ணப்பிக்க கடைசி தேதி

28.02.2026


தருமபுரி மாவட்டத்தில் உள்ள கிறித்துவ மக்கள் இந்த அரசு மானியத் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.



© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies