Type Here to Get Search Results !

பொம்மிடி அருகே ரயிலில் அடிபட்டு உயிரிழந்த இளைஞரின் உடலை நல்லடக்கம் செய்த மை தருமபுரி அமைப்பினர்.


 தருமபுரி | நவம்பர் 18:

தருமபுரி மாவட்டம் பொம்மிடி ரயில் நிலையம் அருகே சுமார் 35 வயதுடைய ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோதும், இறந்தவரின் அடையாளம் தொடர்பான எந்த தகவலும் கிடைக்கவில்லை.


ஆதரவின்றி இறந்தோர் உடல்களை நகராட்சி அனுமதியுடன் தருமபுரி பச்சையம்மன் கோவில் மயானத்தில் மனிதநேய அடக்குமுறையுடன் நல்லடக்கம் செய்து வரும் மை தருமபுரி அமரர் சேவை அமைப்பு இந்த இளைஞரின் உடலையும் மரியாதையுடன் நல்லடக்கம் செய்தது. இறந்தவரை தங்கள் உறவாக கருதி பொம்மிடி ரயில்வே காவலர் சசிகுமார், மை தருமபுரி நிறுவனர் சதீஸ் குமார் ராஜா, தன்னார்வலர் கணேஷ் ஆகியோர் உடலை இறுதி அஞ்சலி செலுத்தி மரியாதையுடன் நல்லடக்கம் செய்தனர். மை தருமபுரி அமைப்பினர் இதுவரை 173 ஆதரவற்ற உடல்களை மனிதநேயத்துடன் நல்லடக்கம் செய்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. “மரணிப்பவர்களிடமும் மனிதநேயம் பகிர்வோம்” என்ற தொண்டும் சமூகத்தினரின் பாராட்டைப் பெற்றுள்ளது.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies