பாலக்கோடு, நவம்பர் 22 :
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில், பாலக்கோடு திமுக சார்பில் தனியார் கூட்டங்கில் S.I.R வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடர்பான BLA2 மற்றும் BDA ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பாலக்கோடு பேரூராட்சி தலைவர் பி.கே. முரளி தலைமையேற்றார்.
மாநில விவசாய அணி அமைப்பாளர் மற்றும் பாலக்கோடு சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் பணி பொறுப்பாளர் அரியப்பன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் பி. பழனியப்பன், வாக்காளர் பட்டியல் திருத்தம் மிகவும் முக்கியமான பணியாக இருப்பதால்,
-
குடும்ப உறுப்பினர்கள் யாரின் பெயரும் தவறுதலாக விடுபடக்கூடாது,
-
படிவங்களை சரியாக பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும்,
-
வரும் சட்டமன்றத் தேர்தலில் அனைவரின் பெயர்களும் சரியாக இடம்பெற உறுதி செய்ய வேண்டும்
என்று வலியுறுத்தினார்.
இதில், பாலக்கோடு திமுக பேரூராட்சியின் அனைத்து அணி நிர்வாகிகள், வார்டு & கிளைச் செயலாளர்கள், பேரூராட்சி துணை தலைவர், வார்டு கவுன்சிலர்கள், BLA2 & BDA வாக்குச்சாவடி முகவர்கள், கட்சி நிர்வாகிகள் ஆகியோர் பெருமளவில் பங்கேற்றனர்.

.jpg)