தருமபுரி – நவம்பர் 21 -
தர்மபுரி மாவட்டம் கொட்டாயூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் வளர்ச்சி துறை மற்றும் கல்வித்துறை தர்மபுரி மாவட்டம் சார்பாக திருக்குறள் திருப்பணிகள் பயிற்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் திரு. கூ.வே. குமார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியின் வரவேற்புரையை சிவ. அண்ணாமலை அவர்கள் நிகழ்த்தினார்.
திருக்குறள் திருப்பணிகள் பயிற்சி அறிமுக உரையை தருமபுரி மாவட்ட கம்பன் பேரவை செயலாளர், புலவர் கா. குமரவேல் அவர்கள் வழங்கி, திருக்குறளின் தத்துவமும், பயன்பாடும் மாணவர்களிடையே விளக்கமாக எடுத்துரைத்தார். நிகழ்ச்சியின் சிறப்புரையை மாநில அளவில் நடைபெற்ற திருக்குறள் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற ஆசிரியை திருமதி வாசுகி வழங்கினார். மாணவர்கள் எண்ணை கூறியவுடன் அதற்குரிய திருக்குறளை துல்லியமாகவும் இனிமையாகவும் அவர் எடுத்துரிந்தது அனைவரையும் கவர்ந்தது.
தமிழ் ஆசிரியர் திருமதி ஸ்ரீமதி அவர்கள் திருக்குறளின் மதிப்பும், அதன் வாழ்வியல் முக்கியத்துவத்தையும் கூறினார். நிகழ்ச்சி முழுவதையும் சீராக ஒருங்கிணைத்தவர் சின்னப்பள்ளத்தூர் தலைமை ஆசிரியர் மா. பழனி. தமிழ் ஆர்வலர் கு. பாலசுப்ரமணியம் நன்றி உரையாற்றினார். நிகழ்வில் பட்டதாரி ஆசிரியர்கள் மா.நாகேந்திரன், மா. சுரேஷ், சி. சுரேஷ், திருமதி செல்லம், இளநிலை உதவியாளர்: முனியம்மாள், ஆய்வக உதவியாளர் குமார் ஆகியோர் பங்கேற்றனர். திருக்குறளை ஒப்புவித்த மாணவர்கள் மற்றும் திருவள்ளுவரின் உருவப்படம் வரைந்த மாணவ–மாணவிகளுக்கு நிகழ்வில் பரிசுகள் வழங்கப்பட்டன.

.jpg)