தருமபுரி – நவம்பர் 21
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில், தொழில் மையம் சார்பில் நடத்தப்பட்ட தொழில் மற்றும் புத்தொழில் கண்காட்சியை தமிழ்நாடு சிப்காட் மேலாண்மை இயக்குநர் திரு. கி. செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் திறந்து வைத்தார்.
சிப்காட் அறிவிப்புகள்
கூட்டத்தில் பேசிய சிப்காட் மேலாண்மை இயக்குநர் தெரிவித்ததாவது:
-
தருமபுரி சிப்காட்டில் இடஒதுக்கீட்டில் 15% குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.
-
குமுடிபூண்டியைத் தொடர்ந்து தருமபுரி சிப்காட்டிற்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதி (MoEF Clearance) கிடைத்துள்ளது.
-
இதன்மூலம் மின்சார வாகனங்களுக்கு தேவையான பேட்டரி உற்பத்தி நிறுவனங்கள் தொடங்குவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.
வேலைவாயிப்பு & திறன் மேம்பாடு
மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ் அவர்கள் கூறியதாவது:
-
தருமபுரி மாவட்டம் கல்வியில் பின்னடைந்த பகுதியாக இருந்த நிலையில், தற்போது மிகுந்த முன்னேற்றம் கண்டுள்ளது.
-
இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உறுதிசெய்ய சிறப்பு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் மற்றும் பெண்களுக்கு தனிப்பட்ட வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
-
மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் வகையில் பெரிய தொழிற்சாலைகளை கொண்டு வர வேண்டும் என சிப்காட் MD-யிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.
திட்ட உதவிகள் மூலம் பலருக்கு பயன்
மாவட்ட தொழில் மையம் வழியாக:
-
அண்ணல் அம்பேத்கார் தொழில் முன்னோடிகள் திட்டம்,
-
கலைஞர் கைவினைத்திட்டம் (KKT)
-
வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (UYEGP)
-
NEEDS திட்டம்
மூலம் மானியத்துடன் கடனுதவி வழங்கப்பட்டு, பலர் தொழில் தொடங்கி வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகின்றனர்.
மேலும், Matrix Buy செயற்கை நுண்ணறிவு செயலி கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு, அதிகாரிகள் பார்வையிட்டனர்.
கண்காட்சி சிறப்பம்சங்கள்
-
பல தொழில் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தினர்
-
அரசு திட்ட விழிப்புணர்வு அரங்குகள் அமைக்கப்பட்டன
-
புதிய தொழில்முனைவோர்கள் ஆலோசனைகள் பெற்றனர்

.jpg)