தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையம் எதிரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ ஓம் ஆறுபடை சக்திவேல் முருகன் கோவிலில், சஷ்டி தேய்பிறை திருநாளை முன்னிட்டு திங்கட்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
நிகழ்வில் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால், பஞ்சாமிர்தம், சந்தனம், குங்குமம், தேன், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, பின்பு புஷ்ப அலங்காரம் மற்றும் விசேஷ ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் மகாதீபாராதனை சிறப்பாக நடைபெற்றது.
பக்தர்கள் அனைவரும் சாமி தரிசனம் செய்து முருகப்பெருமானின் அருளைப் பெற்றனர். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜைக்குப் பின் பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம், நெய்வேதியம், மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில் வளாகம் முழுவதும் “வேல் வேல் முருகன்” எனும் கோஷங்களால் ஆன்மீக சூழல் பரவியிருந்தது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு: 📞 9843 663 662

.jpg)