பாலக்கோடு – நவம்பர் 15:
பாலக்கோடு பேரூராட்சி, வட்டாட்சியர் அலுவலகம் எதிர் பகுதியில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் நீண்டநாள் முன்வைத்து வந்த கோரிக்கையை கருத்தில் கொண்டு, பொதுநிதித் திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பாலக்கோடு பேரூராட்சி தலைவர் பி.கே. முரளி இன்று பூமி பூஜை செய்து, புதிய பயணியர் நிழற்கூடம் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் திமுக நகர அவைத் தலைவர் அமானுல்லா, பேரூராட்சி கவுன்சிலர்கள், தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் தமிழரசன், ஸ்ரீதர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பணிகள் தொடக்க விழாவில் பங்கேற்றனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி & விளம்பர தொடர்புக்கு: 📞 9843 663 662

.jpg)