தருமபுரி, நவம்பர் 15:
தருமபுரி மாவட்டத்தில் மை தருமபுரி அமைப்பு கடந்த ஐந்து ஆண்டுகளாக அரசு மருத்துவமனை எதிரில் “பசிக்குதா வாங்க சாப்பிடுங்க” என்னும் அன்னதானத் திட்டத்தின் மூலம் மருத்துவ பயனாளர்கள், பசித்தோர், ஏழை–எளியோர் ஆகியோருக்கு தினந்தோறும் உணவு வழங்கி வருகிறது.
இச்சேவையை மேலும் விரிவுபடுத்தும் வகையில், எண்ணங்களின் சங்கமம் அய்யா பிரபாகரன், காமதேனு சாரிட்டிஸ் அய்யா சங்கர் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், வி ஃபார் யூ டிரஸ்ட், மை தருமபுரி அறக்கட்டளை ஆகியவை இணைந்து மருத்துவ பயனாளர்களுக்காக காலை நேரத்தில் சத்தான நொய்கஞ்சி வழங்கும் சேவைத்திட்டத்தை தொடங்கின. இத்திட்டம் தொடர்ந்து நடைபெற்று இன்று 100ஆம் நாளை எட்டியுள்ளது.
100ஆம் நாள் விழா சிறப்பாக நடைபெற்றது, இதில் சிறப்பு விருந்தினர்களாக எண்ணங்களின் சங்கமம் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ், பி.எஸ்.பி டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ் சுரேஷ், ஆதி பவுண்டேஷன் ஆதிமூலம், ஆசிரியர் பசுமை சங்கர், தகடூர் விஸ்வநாதன், கட்டுமான தொழிற்சங்கம் முனைவர் கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பாராட்டு தெரிவித்தனர்.
மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, செயலாளர் முனைவர் தமிழ்செல்வன், ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், அமைப்பாளர் செந்தில், தன்னார்வலர்கள் கணேஷ், அம்பிகா ஆகியோர் இணைந்து நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி & விளம்பர தொடர்புக்கு: 📞 9843 663 662

.jpg)