அரூர் – நவம்பர் 14:
பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைமையிலான NDA கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து, அரூர் நகர பாஜக சார்பில் கொண்டாட்டம் நடைபெற்றது. அரூர் பேருந்து நிலையத்தில் நடந்த இந்த விழாவுக்கு நகர பாஜக தலைவர் ரூபன் தலைமையேற்றார். பாஜகவினர் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம் செய்ததுடன், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி பகிர்ந்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சாமிக்கண்ணு, மாவட்ட பொதுச்செயலாளர் ஜெ.பிரவின், மகளிரணி நிர்வாகிகள் சித்ரா, சரிதா, கலையரசி, ரஞ்சிதம் ஆகியோர் பங்கேற்றனர். அதேபோல் நிர்வாகிகள் கலையரசன், பாலாஜி, சுரேஷ், சுகவனம், வேலவன், பிரவீன் ராஜ், பி.முருகன், மணவாளன், ராஜதுரை, பவுன்ராஜ், நந்தகுமார், சுமதி, கிருஷ்ணமூர்த்தி, சௌந்தர், செந்தில், விவேகானந்தன், ஸ்ரீனிவாசன், மாது உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு பாஜக வெற்றியை கொண்டாடினர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி & விளம்பர தொடர்புக்கு: 📞 9843 663 662

.jpg)